40 வயதை கடந்த ஆண் பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களில் மூல நோய்
முக்கியமானது.
புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு 10 மில்லியன் பேர் மூலநோயினால் பாதிப்படைகிறார்கள்.
மலக்குடல் நோய் 40 சதவீத மக்களுக்கு வாழ்நாளில் பல தடவை தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நோய் வந்தவர்கள் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சை எடுக்கத் தவறுவதால் பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை என பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
மூல நோய் எப்படி ஏற்படுகிறது.
மலக்குடலில் வெளிப்புறத்தில் ஒரு சுருக்குத் தசை மூடி(Spincter ani) இருக்கிறது. இதை மறைவாய் என்கிறோம் (Anus). பெருங்குடலின் கடைசிப் பகுதி “எஸ்” போல் வளைந்து மலக்குடல் ஆக இருக்கிறது இந்த மலக்குடல் பகுதியின் உட்புறத்தில் சளிச்சவ்வு படலம் படர்ந்து இருக்கிறது இந்த சளி சவ்வுப் படலத்தில் சிறுசிறு குருதி நாளங்கள் பின்னிப்படர்ந்து உள்ளன. சிறையின் ரத்தக்குழாய்களில் உள்ள வால்வுகளால் ரத்தத்தை உடனே மேலேற்ற இயலாத காரணத்தால் இரத்தத் தேக்கம் ஏற்பட்டு இதன் காரணமாக ரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுகிறது. காலப்போக்கில் இவ்வாறு சிறை இரத்த நாளங்களில் அடைப்பு அளவில் பெருத்து பெருமளவு கரும் குருதியை தேக்கி வைத்துக் கொண்டு புளியங்கொட்டை அல்லது திராட்சைப் பழ அளவில்கூட பெருத்து விடுவதுண்டு.
ஒரு ரத்தக்குழாய் மட்டும் பெருத்து மூலம் முளையாக உண்டாகலாம் அல்லது பல ரத்தக்குழாய்களும் பல அளவில் பெருத்து திராட்சைக் கொத்து போல பல மூலம் முளைகளாக தோற்றுவிக்கலாம்.
மலவாய்க்கு அருகில் வெளிப்புறமாக துருத்திக் கொண்டு வரும் மூல முளைகளை “வெளி மூலம்”
என்கிறோம்.
மலக்குடல் குள்ளேயே புடைத்துக் கொண்டிருக்கும் ரத்தநாளங்களை “உள் மூலம்” என்கிறோம்.
மலம் கழிக்கும் போது புடைத்த ரத்த நாளங்கள் ஏதாவது உடைத்துக்கொண்டு ரத்தம் கசிய ஆரம்பித்து விட்டால் அதனை “குருதி மூலம்” என்கிறோம் அல்லது “ரத்தம் மூலம் “என்று அழைக்கப்படுகிறது.
மூல நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்.
மூல நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு சிலருக்கு குடும்ப வாகு காரணமாக ஏற்படுகிறது.
மூலநோய்க்கு நோயணுக்கள் காரணம் அல்ல இது தொற்று நோய் அல்ல.
முக்கிய காரணமாக கருதப்படுவது கல்லீரல் மிகைக் குருதி அழுத்தமாகும்.
மூல நோய்க்கு மலச்சிக்கல் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது மற்றும் மலச்சிக்கல் காரணமாக தொடர்ந்து முக்கி, முக்கி மலம் கழிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
உட்கார்ந்தேயிக்கும் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.
கடினமான இருக்கைகளை பயன்படுத்துவது.
அடிக்கடி தாய்மையுறுதல்
கர்ப்பப்பை இறக்கம் மற்றும் மலக்குடலில் தோன்றும் புதிய தசை வளர்வு காரணமாகவும் மூல நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நோயின் அறிகுறிகள்.
முதலில் ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும் வலி இருக்காது.
மூல நோயின் விளைவாக மலச்சிக்கல் உண்டாகும் மலச்சிக்கல் காரணமாக முக்கி மலம் கழிக்கும் போது ரத்த நாளங்களில் விரிசல் ஏற்பட்டு ரத்தப் போக்கு ஏற்படுகிறது குறிப்பாக மலம் கழித்த உடனேயே நல்ல சிவப்புக் குருதியாக மல வாயினின்று வெளியே ஊற்றும்.
மலம் கழிக்கும்போது மல வாயில் கடுமையான வலி தோன்றும்.
மூல முளைகள் மல வாய் வழியே வெளியே துருத்திக் கொண்டு வந்து சிக்கிக் கொண்டால் தாங்க இயலாத வலி இருக்கும்.
மலம் கழிக்கும் போதெல்லாம் ரத்தக் கசிவு ஏற்படுவதால் ரத்தசோகை நோய் உண்டாகிறது.
மலக்குடல் வலியின் காரணமாக நோயாளர்களுக்கு அடிக்கடி மன எரிச்சல் தோன்றும் அதன் காரணமாக கோபம் அதிகம் உள்ளவர்களாகவும் சிடுசிடுப்பு உள்ளவர்களாகவும் மாறிவிடுவர்.
ரத்தம் அதிகம் வெளியேறி சோகை நோய் வந்து விட்டால் கை கால் அசதி பசியின்மை உடல் சோர்வு மற்றும் மன சோர்வு ஏற்பட்டு வாழ்வை பாரமாக நினைப்பார் இது போன்ற குறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னரும் மீண்டும் மீண்டும் நோயினால் பாதிப்படைவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எங்களுடைய ஹோமியோ கேரின் constitutional சிறப்பு சிகிச்சை வாயிலாக, மூல நோய் ஆரம்ப நிலையில் இருந்தாலும் சரி அறுவை சிகிச்சை நிலையில் இருந்தாலும் சரி நோயாளிகளின் நோயின் அறிகுறிகள், மனம் மற்றும் உடல் வாகு இவற்றை நன்கு ஆராய்ந்து அவர்களுக்குறிய மருந்தினை கொடுக்கும்பொழுது எந்த ஒரு பக்கவிளைவும் இன்றி மூல நோய் முற்றிலும் குணமாகும்.
இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்: 1800-102-2202.