சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.
காரணங்கள்
சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.
சிறுநீரக கற்களின் வகைகள்
கால்சியம் கற்கள்
இவை அதிகமாக ஏற்படக்கூடியவை. அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்பத் ஏற்படும் தன்மையுடையது. கால்சியம்இ ஆக்ஸலேட்இ பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.
யூரிக் அமில கற்கள்
இக்கற்கள் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
ஸ்ட்ருவைட் கற்கள்
மெக்னீஸியம் அமோனியம் அல்லது பாஸ்பேட் படிகங்கள் ஏற்படும் கல்.
ஸ்ட்ருவைட் கற்கள் என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள்இ சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
* குறைந்த அளவு தண்ணீர் குடித்தல்
* சுண்ணாம்பு, யூரியா, அமோனியா சம்பந்தப்பட்ட உணவுகள்
* சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவது
* தைராய்டு
* அதிக உடல் எடை
* வேகமான மற்றும் முறையற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள்
* எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்ணுதல்
* மது, புகைப்பழக்கம்
* மரபு காரணம்
* சிறுநீர்த் தொற்றுநோய்கள்
சிறுநீரக கற்களை கண்டறியும் முறை
சிறுநீரக கற்களை எளிய பரிசோதனை மூலம் கண்டறியலாம் அவைகள் கீழ்க்கண்டவாறு
X ray
USG abdomen
MRI scan
சிறுநீர் கற்கள் வெளிவந்த பின் அந்த கற்களையும் பரிசோதனை செய்து அது எந்த வகையான சிறுநீர் கற்கள் என்று தெரிந்து கொண்டால் அதற்கேற்ப நம் வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொண்டு மீண்டும் அந்த கற்களை வராமல் தடுக்க முடியும்
சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறுநீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்
ஹோமியோபதி சிகிச்சை
கல் வடிவம் கல் உருவாகியுள்ள இடம் ஆகிய நிலைகளுக்கு தகுந்தாற்போல சிகிச்சை அமைகிறது. ஹோமியோபதி மருந்து தேர்வு நபருக்கு நபர் மாறுபடும் கல் உருவாகியுள்ள இடத்தை பொறுத்தும், வலியின் தன்மையை பொறுத்தும் நோயுள்ள போது நோயாளியின் மனநிலையை பொருத்தும் மருந்து தேர்வு செய்து சிகிச்சையளிக்கப்படுவதால் கல் கரைந்து வெளியேறுகிறது. குறிப்பாக ஹோமியோபதி மருத்துவ முறையில் கல் மீண்டும் மீண்டும் உருவாகாமல் தடுக்க பெருமளவு வாய்ப்புள்ளது.
எங்களது ஹோமியோ கேர் மருத்துவமனையில் constitutional சிகிச்சை மூலம் சிறுநீரக கற்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படுகிறது எங்களது ஹோமியோ கேர் மருத்துவமனையில் அதிக நபர்கள் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளார்கள்.
இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்: 1800-102-2202.