முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.

இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம்; இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம். இது மந்தமான வலியாக அல்லது ஊடுருவிப் பாயும் அல்லது மிகுவான அல்லது எரியும் உணர்வையும் உண்டாக்கலாம். வலி கரங்களுக்கும் (கைக்கும்), மேல் முதுகு அல்லது கீழ் முதுகு (கால் அல்லது பாதத்திற்கும் செல்லக்கூடும்) பரவலாம். வலியல்லாமல் பலவீனம், உணர்ச்சியின்மை அல்லது முள் போன்று குத்துதல் போன்ற மற்ற அறிகுறிகளும் உட்படலாம்.

 

முதுகுத்தண்டென்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும். இவையனைத்தும் வலியை உண்டாக்கக்கூடியவையாகும்.

 

‘‘கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள தண்டுவட எலும்புகள், அதைச் சுற்றியுள்ள தசைகள், தசை நார்கள் மற்றும் அதன் உள்ளே இருக்கும் நரம்புகளின் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய வலிதான், முதுகுவலி. கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப்பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்… இவை அனைத்தும் இணைந்ததே முதுகுத்தண்டுவடம்.

 

தண்டு வடத்தில் பிரச்னை ஏற்படக் காரணங்கள் என்ன?
போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிக அயர்ச்சி (ஸ்ட்ரெயின்), அதிக வேலை, அதீத உடற்பயிற்சி, அதீத விளையாட்டு, அடிபடுவது, கிருமிகளின் தாக்குதல், புற்றுநோய் பாதிப்பு, அதிக நேரம் உட்கார்ந்த படியே வேலை செய்வது, தவறான முறையில் பளு தூக்குவது, எலும்புத் தேய்மானம், எலும்பு பலவீனம் போன்றவற்றை தண்டு வடத்தில் பிரச்னைகள் ஏற்படுத்து வதற்கும், அதனால் முதுகு வலி உண்டாவ தற்குமான பொதுக் காரணங்களாகச் சொல்லலாம்.

 

அறிகுறிகள் என்னென்ன?

தினசரி நடவடிக்கையால் அதிக வலி

தசைப்பிடிப்பு

அன்றாட வேலைகளைச் செய்வதில் சிக்கல்

நடக்க முடியாமல் போவது

உட்கார்ந்து எழுவதில் சிரமம்

கை, கால் பலவீனம் அடைவது

தொடர்ந்து வேலை செய்வதில் சிக்கல்

சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மற்றும் பல.

 

முதுகுவலி என்பது முதுகில் ஏற்படும் வலி என்பதுடன் நின்றுவிடாது. கவனிக்காமல் விட்டால், சிலருக்கு முதுகுவலி யுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலருக்கு இருமும்போது, தும்மும் போது கூட முதுகுவலி அதிகரிக்கலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது, சிறிது நேரம் அமர்வதுகூட கடினமாக இருக்கும். தண்டு வடத்தில் ஏற்படும் அதிகப் படியான பாதிப்பால் சிலருக்கு கூன் விழலாம்.

 

முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

திடீரென முதுகுவலி வந்தால், அது அப்போதைய தற்காலிக செயலால் வந்த வலி என்று விட்டுவிடலாம். போதிய ஓய்வே அதற்கான சிகிச்சை. தேவையென்றால் தைலம் தடவிக்கொள்ளலாம். இரண்டு நாட்களில் வலி சரியாகிவிடும். அதற்கும் மேல் தொடர்ந்தால், அது சாதாரண வலி அல்ல என்பதை உணர்ந்து, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வலிக்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும்.

என்னென்ன சோதனை முறைகள்?

அறிகுறிகள் ப்ளஸ் சோதனைகள்: பாதிக்கப் பட்டவர் சொல்லும் அறிகுறிகள் மற்றும் அவரை நடக்கச் சொல்வது, அமரச் சொல்வது, எழுந்து நிற்கச் சொல்வது மூலம் மருத்துவர் மேற்கொள்ளும் சோதனைகளின் அடிப்படையில், முதுகு வலிக்கான காரணத்தை 50% கண்டறியலாம்.

எக்ஸ்ரே: எலும்புத் தேய்மானம், அடிபட்டிருப்பது, பலவீனம், புற்றுநோய் பாதிப்பு போன்றவற்றை எக்ஸ்ரேயின் மூலமாகக் கண்டறியலாம்.

ரத்தப் பரிசோதனை: எலும்பு பலவீனம், எலும்புக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு, கிருமித் தொற்று, புற்றுநோய்  பாதிப்பு மற்றும் முதுகுவலிக்காக அளிக்கவிருக் கும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்டவருக்கு போதிய உடல் தகுதி இருக்கிறதா… கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகள் சரிவர உள்ளதா… இவற்றை எல்லாம் ரத்தப் பரிசோதனையின் மூலமாகக் கண்டுபிடிக்கலாம். முதுகுவலிக்கான 50% – 80% காரணங்களை  எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன்: எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலமாக கண்டுபிடிக்க இயலாத முதுகுவலிக் காரணங் களை, சிடி ஸ்கேன் மூலமாகவும், அதிலும் கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாகவும் கண்டறியலாம்.

 

ஹோமியோபதி மருத்துவ முறையில் எங்களது ஹோமியோகேர் மருத்துவமனையில் constitutional சிகிச்சை முறைப்படி முதுகு வலிக்கு மருந்துகள் அளிக்கப்படுகிறது

இந்த மருந்துகள் வெறும் வலி நிவாரணியாக மட்டுமல்லாமல்..நோயின் அடிப்படைக் காரணத்தை மாற்றக்கூடிய திறன் பெற்றது இதனால் நோயாளி முதுகு வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறுவார். அதுமட்டுமல்லாமல் ஹோமியோபதி மருந்துகள் மனதின் அடிப்படையைக் கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது எனவே முதுகு வலியின் மூல காரணத்தை ஹோமியோபதி மருந்துகளால் சமன் செய்யப்படுகிறது அதனால் அது நிரந்தர தீர்வாக உள்ளது

ஹோமியோபதி மருந்துகளால் முதுகுவலி நோயாளிகள் அறுவை சிகிச்சை இன்றி வாழ்நாள் முழுவதும் தங்களது வேலைகளை எளிதாக செய்யக்கூடிய திறமை பெறுகிறார்கள்

மற்றும் வலியால் ஏற்பட்ட மன உளைச்சல் கூட ஹோமியோபதி மருந்துகளால் சரி செய்யப்படுகிறது.

இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்: 1800-102-2202.

முதுகுவலிக்கு ஹோமியோபதி சிகிச்சை

Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *